ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னணியின் சின்னம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்கிழமை இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரியவருகிறது.
இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தியின் சின்னமாக அன்னத்தை ஏற்றுக் கொள்வது என அதன் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோர் அறிவித்துள்னர்.
எனவே சின்னம் அதுவாகவே இருக்கலாம் என்று முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சஜித் பிரேமதாசவே பிரதமர் வேட்பாளர் என்ற வகையில் அவரே நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை வகிப்பார் என்றும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்