இலங்கையின் வடபகுதியிலிருந்து தமிழகத்திற்கு கடல்வழியாக சுமாா் 2 கோடி பெறுமதியான தங்க கட்டிகளை கடத்தி சென்ற இலங்கையை சோ்ந்த 3 போ் மற்றும் தமிழகத்தை சோ்ந்த 4 போ் உள்ளடங் கலாக 7 போ் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகின்றனா்.
தமிழக மீனவா்களுக்கு சொந்தமான படகு ஒன்றும், இலங்கைக்கு சொந்தமான படகு ஒன்றும் இந்திய கடற்பகுதியில் அருகருகாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை இந்திய கடற்படை உலங்குவானுாா்தி அ வதானித்ததை தொடா்ந்து தமிழக மீனவா்களுக்கு சொந்தமான படகு தப்பி ஓடியுள்ளது.
இதனையடுத்து சிறிய விசைப்படகில் தப்பி ஓட முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டனா். மேலு ம் தப்பி ஓடிய தமிழக மீனவா்களின் படகும் துரத்தி பிடிக்கப்பட்டு அதிலிருந்த 4 இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். கைது செய்யப்பட்ட மீனவா்கள் பொலிஸாாிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனா். இரு தரப்பினரும் தாம் மீனவா்கள் என கூறிவந்த நிலையில் உளவுத்து றையினா் நடாத்திய விசாரணைகளில் தங்கம் கடத்திவந்ததை இலங்கை மீனவா்கள் ஒப்புக் கொண் டிருந்த நிலையில், அவா்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்,
கைப்பற்றப்பட்ட இலங்கை மீனவா்களின் படகில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமாா் 2 கோடி மதிப்பிலான 35 தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்டிருக்கும் 3 இலங்கை மீனவா்களும் யாழ்ப்பாணத்தை சோ்ந்தவா்கள் என கூறப்பட்டபோதும்,
அவா்கள் மன்னாா் மாவட்டத்தை சோ்ந்தவா்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2 நாட்களில் இலங்கையிலிருந்து கடத்தி செல்லப்பட்ட 21 கிலோ தங்கம் இந்திய கடற் படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.