குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை என்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சமாளிக்கவே போக்சோ சட்டம் இயற்றப்பட்ட நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த மாதிரி இல்லை. இந்த நிலையில் ராஜஸ்தானில் பரத்பூர் என்னும் ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் அந்த பள்ளியின் முதல்வர் ஒரு மைனர் பெண்ணை முத்தமிடும் வீடியோ பதிவும் தற்போது வைரல் ஆகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இதைத்தொடர்ந்து அந்த சிறுமி பள்ளி முதல்வரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி முதல்வரின் அறையை சுத்தம் செய்ய அந்த சிறுமி அவரது அறைக்கு சென்றதாகவும், அப்போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் பள்ளி முதல்வர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.