கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள அடிக்கு மாடி வீட்டுத்தொகுதி ஒன்றிலிருந்து விழுந்து பெண் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 2.15 மணியளவில் 19ஆம் மாடியில் இருந்து விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 41 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் எலிபென்க் டவர், ஹெவ்லொக் என்ற விலாசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை. இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.