ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், இன்று காலை மூவர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
கடந்த வௌ்ளிக்கிழமை முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் அ.செவியர் (சயந்தன்) மணல் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் உப்புமாவெளி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரதேசசபை உறுப்பினருக்கு சொந்மான உப்புமாவெளி பகுதியில் உள்ள காணியில் மணல் அகழப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அவர் அங்கு சென்றுள்ளார்.
இதன்போது மணல் கொள்ளையர்களிடம், இது தனது காணியென அவர் கூறியபோது, கொள்ளையர்கள் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் அவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட தாக்குதல் நடத்தியவர்கள் 6 பேர் கொண்ட குழுவினர் எனவும், அவர்கள் உப்புமாவெளி பகுதினைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்களில் மூவர் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் ஏனைய மூவரையும் பொலிசார் தேடி வருகிறார்கள்.