கடந்தகால நல்லாட்சி அரசு புரளியாகவே செயற்பட்டிருக்கிறதென கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலையில் இன்று இடம்பெற்ற திறனாய்வு போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இப் போட்டியில் பங்குபற்றும் மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாடசாலை தொடர்பாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
மைதானத்திற்கு வேலி, அதைவிட சிறுவர் விளையாட்டு முற்றம், பாண்ட் செற், நூறடி கொண்ட திறந்த கட்டிடம், பாடசாலையில் குடிநீர் பிரச்சனையும் முன் வைக்கப்பட்டிருக்கின்றது. அதே நேரத்தில் இப் பாடசாலைக்கான வீதி போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்படுவதாக மக்கள் கூறுகின்றார்கள்.
கடந்த காலத்தில் நல்லாட்சியில் இருந்த அரசு இவற்றை செப்பனிட்டிருக்க வேண்டும்.
ஆனால் அது புரளியாகவே போய்விட்டது. ஆனபடியால் வர இருக்கின்ற சந்தர்ப்பங்களில் அதற்கான ஏற்பாட்டை நீங்கள் வைக்கின்ற கோரிக்கைக்கேற்ப செய்யவுள்ளதாகவும் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பாக நிச்சயமாக செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் வயல் காணிகள் தொடர்பாகவும் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த மக்களுக்காக காணியை துப்பரவு செய்து பெறப்பட்ட போதும் வனவள திணைக்களம் இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதனை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளையும் பெற்றுத் தருவேன் என்று கூறிக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.