பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
நடப்பு அரசியல், எதிர்வரும் பொதுத்தேர்தல் உட்பட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது பேசப்பட்டன.
ஏற்கனவே மகிந்த தலைவராகவும், மைத்திரி தவிசாளராகவும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி நேற்று தேர்தல்கள் ஆணையகத்தில் பதிவுசெய்யப்பட்டது.
இந்த முன்னணிக்கு பசில் ராஜபக்ச செயலாளராக செயற்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.