எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் படு தோல்வியடையவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சவால் அல்ல. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இருந்த நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளார். எனவே சஜித் பொதுத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தோன்றவுள்ள பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பில் இன்று பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
ஒரு தரப்பினர் யானை சின்னத்தையும் பிறிதொரு தரப்பினர் அன்னம் சின்னத்தையும் மூன்றாவது தரப்பினர் இதயம் சின்னத்தையும் உரிமை கோருகின்றார்கள்.
பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பதவிகள் தற்போது சிறந்த பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டணியின் ஊடாகவே பொதுத் தேர்தலில் வெற்றிப் பெறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.