வில்பத்து வனப்பகுதியில் சட்டவிரோத குடியேற்றம் மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் ஏனையோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு 2020 ஏப்ரல் 3ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் இதுவரை விசாரணை செய்யப்பட்டு வந்தது.
ரிசாட் பதியுதீன் மீது பல்வேறு தரப்புகளும் இது தொடர்பில் குற்றம் சுமத்தி வந்தன எனினும் தாம் சட்டவிரோதமாக குடியேற்றங்களை மேற்கொள்ளவில்லை என ரிசாட் பதியுதீன் மறுப்பை வெளியிட்டு வருகிறார்.
பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் தமது பழைய இடங்களிலேயே குடியமர்த்துள்ளதாக பதியுதீன் தெரிவித்து வருகிறார்.