ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் எயார்பஸ் ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி கையாள்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் குரல் எழுப்ப வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
இந்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நேற்று நாடாளுமன்றில் விடுத்துள்ளார்.
மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் மற்றும் மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் அத்துரலியே ரதன பல்வேறு சந்தர்ப்பங்களில் குரல் எழுப்பி வந்தார்.
இந்த நிலையில் ராஜபக்ச ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட எயார்பஸ் பாரிய நிதிமோசடி தொடர்பிலும் ரதன தேரர் வலியுறுத்தல்களை விடுக்க வேண்டும்.
இதேவேளை எயார்பஸ் நிதிமோசடி தொடர்பான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது அத்துரலியே ரதன தேரர் நாடாளுமன்றுக்கு சமூகமளிக்காமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.