சமூக வலைத்தளம் ஊடாக சிறுமிகளை அச்சுறுத்தி பாலியல் ரீதியாக பயன்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிறுமிகளிடம் புகைப்படங்களை பெற்றுக் கொள்ளும் இந்த கும்பல் அதனை நிர்வாண உடல்களுடன் இணைத்து இணையத்தளத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்திறுத்தியுள்ளது.
அச்சுறுத்தல்களுக்கு அச்சப்படும் சிறுவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் இந்த கும்பல் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் இணையத்தள குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன் விசாரணையின் முடிவாக பொரளை பிரதேச பாடசாலை மாணவி ஒருவரை பல முறை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த 7 பேரை, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட பொலிஸ் விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 வயதான பாடசாலை மாணவர்கள் எனவும் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.