ராஜபக்ச அரசைத் தோற்கடிப்பதற்காகத் தான் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“என்னால் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துளேன். இருப்பினும், இதுவரையில் எனக்கு 5 பிரதான கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
நான் உருவாக்கவுள்ள புதிய கட்சியின் செயற்பாடுகள் தோல்வியுறும் பட்சத்தில் என்னை அழைத்த 5 கட்சிகளில் ஒரு கட்சிக்குத் தலைமை ஏற்று வழிநடத்தவுள்ளேன்.
தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இல்லை” – என்றார்.