இந்தியாவில் 16 வயது சிறுவனை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேபளத்தை சேர்ந்தவர் அமீர் (19) பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெங்களூரில் கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தான்.
அமீர் கேஸ் வினியோகம் செய்யும் ஒரு வீட்டில் நேபாளத்தை சேர்ந்த அகிரிதி (19) என்ற பெண் வேலை செய்து வந்தார்.
இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாகி பின்னர் காதலர்களாக மாறினார்கள். இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்னர் பெற்றோரின் வீட்டை விட்டு ஓடி வந்த அகிரிதி அமீர் மற்றும் அவர் குடும்பத்தாருடன் தங்கினார்.
தங்கள் மகளின் இந்த மோசமான செயலால் அகிரிதியை கைவிட்ட அவர் பெற்றோர் நேபாளத்துக்கு சென்றுவிட்டனர்.
அதே சமயம் அமீரின் பெற்றோர் தங்கள் மகனுக்கும், அகிரிதிக்கும் கடந்த 15ஆம் திகதி திருமணம் செய்து வைத்தனர்.
பின்னர் அமீரும், அகிரிதியும் கணவன், மனைவியாக வாழ தொடங்கினார்கள்.
ஆனால் அமீரின் வயது குறித்து அறிந்த அருகில் வசிப்போர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து அங்கு வந்த பொலிசார் இருவரின் வயது சான்றிதழ்களையும் பார்த்த போது அமீருக்கு 16 வயது என்பதும், அகிரிதிக்கு 19 வயது என்பதும் உறுதியானது.
இதையடுத்து சிறுவன் அமீரை பொலிசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
மேலும் அகிரிதி மற்றும் அவர் மாமனார், மாமியாருக்கும் விசாரணை தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.