கொவிட் -19 என்ற புதியகொரோனா வைரஸ் தொற்று தென் கொரியாவில் வேகமாக பரவிவருவதால், அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் சிறப்பு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தென்கொரிய தலைநகரான சியோலில் உள்ள இலங்கை தூதரகத்துடன் ஒருங்கிணைந்து வெளிவிவகார அமைச்சகம், தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை உன்னிப்பாக கண்காணித்து ஒருங்கிணைத்து வருகிறது, டேகு நகரில் சமீபத்தில் கொவிட் -19 வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.
சியோலில் உள்ள இலங்கை தூதரகத்தின் கருத்தின்படி, தற்போது எந்த ஒரு இலங்கையரும் வைரஸால் பாதிக்கப்படவில்லை.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 20,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டில் வசிக்கின்றனர். 915 பேர் வசிக்கும் டேகுவில் உள்ள இலங்கையர்கள் மீது தூதரகம் குறிப்பாக கவனம் செலுத்துகிறது.
தூதரகத்தால் இயக்கப்படும் அவசர தொலைபேசி இலக்கங்கள் தற்போது செயல்படுகின்றன, மேலும் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிக்க ஹெல்ப் டெஸ்க் செயல்படுகிறது.
இரண்டு சமூக ஊடக குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன மற்றும் மிஷன் இலங்கை கோயில்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருடனும் தொடர்பு கொண்டுள்ளது.
அவசர தொலைபேசி இலக்கங்கள்,
- தூதரகத்தின் அவசர தொலைபேசி இலக்கங்கள்: (0082) -2-735-2966, (0082) -2-735-2967, (0082) -2-794-2968
- செல்வி சசங்க நிகாபிட்டி, முதல் செயலாளர் – (0082) -10-7222-1352
- திரு. சேனரத் யாப்பா, ஆலோசகர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) – (0082) -10-3389-2227
- செல்வி நிலந்தி பெலவத்தகே, இரண்டாவது செயலாளர் – (0082) -10-4084-0855
- செல்வி சமந்தா சேநாயக்க, மூன்றாவது செயலாளர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) – (0082) -10-7499-2966