யாழ். மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் முஸ்லிம், சிங்களவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாக மாவட்ட செயலக தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு 110 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 366 பேரும், 2 ஆயிரத்து 326 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 369 பேரும், தமிழர்கள் ஒரு இலட்சத்து 92 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 14 ஆயிரத்து 444 பேரும் வசித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு 106 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 358 பேரும், ஆயிரத்து 236 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 919 பேரும், தமிழர்கள் ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 711 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 10 ஆயிரத்து 216 பேரும் வசித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு 101 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 335 பேரும், ஆயிரத்து 239 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 878 பேரும், தமிழர்கள் ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 793 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 11 ஆயிரத்து 249 பேரும் வசித்துள்ளனர்.