பத்திரிகைகளின் மீது காட்டப்பட்ட மதவாத தாக்குதலுக்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது பற்றி சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ.ஜெ.மயூரக்குருக்கள் அனுப்பி வைத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பத்திரிகைகள் என்பது அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றவை. அவ்வாறு நடைபெறுகின்ற செயற்பாடுகளில் சமூக அநீதிகளைத் தட்டிக்கேட்பதும். அவர்களின் கடமையே. தனியார் பத்திரிகை அலுவலகத்தினுள் 30 பேர் அடங்கிய குழு ஒன்று பாதிரியார் ஒருவரின் ஏற்பாட்டில் புகுந்து அட்டகாசம் புரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. உறுதிப்படுத்தப்பட்ட உண்மைத் தன்மையில் வெளியிடப்பட்ட கருத்து ஒன்றிற்கு வன்முறை வழியாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
மத ரீதியான சகிப்பு தன்மையுடன் வாழ்ந்து பழக்கப்பட்ட ஓர் இனம் இன்று இவ்வாறான செயற்பாடுகளைச் செய்கின்ற போது பின்புலத்தில் ஏதோ ஓர் இயக்குசக்தி இருக்க வேண்டும்.
சமூகத்தில் மத அடிப்படையிலான குரோதத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அனுமதிக்கப்பட முடியாத செயல்.
திருக்கேதீஸ்வரம் முதல் நீராவியடி என பல வழிகளில் எம்மதம் ஏனைய மதத்தினரால் நிந்திக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இச்செயலில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டனையளிக்கப்பட வேண்டும். அதற்காக குறித்த பத்திரிகையுடன் நாம் என்றுமே பக்கபலமாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடருமேயானால் அதற்கான விளைவுகளும் பெரிதாகவே அமையும். எனவே சம்மந்தப்பட்ட வீதித்திருத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அதில் உள்ளது.