தான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
கோவையில் நடந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னிடம் குடியுரிமை சான்று கேட்டால் தான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என்று தெரிவிக்க முடிவெடுத்துவிட்டதாகவும், இதையே ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியுரிமை கேட்டு வரும் அதிகாரியை 50பேர் சேர்ந்து மடக்கி, முதலில் அவரது குடியுரிமை சான்றை காட்டச்சொல்வோம் என்று சீமான் பேசினார்.
தொடர்ந்து காஷ்மீர் தனி நாடு என்றும் அதனை யூனியன் பிரதேசமாகவும், ஒன்றிய பிரதேசமாகவும் மாற்றியது கொடுமை என கனத்த குரலில் முழங்கினார்.
மேலும், தான் எவ்வளவு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக முழங்கினாலும், அவர்கள் தங்களுக்கு வாக்களிப்பதில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.