நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஆய்வொன்றில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 தமிழ் எம்.பிகளின் தரவரிசையில் திலகர் எம்.பி முதலாவது இடத்திலும், எட்டாம் இடத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 30 ஆவது இடத்தைப் பெற்றுள்ள திலகர், தொழிலாளர் விடயங்களுக்காக குரல் கொடுத்தமைக்காக 06 வது இடத்தையும் பிடித்துள்ளார்.
தொழில்சார் விடயங்களுக்காக குரல் கொடுத்தமைக்காக முதல் மூன்று இடங்களை மக்கள் விடுதலை முன்னணியின் எம்.பிகளான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துனத்தி, அனுரகுமார திசாநாயக்க ஆகியோரும், 4ஆம், 5ஆம் இடங்களை முன்னாள் தொழில் அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, ரவீந்திர சமரவீர ஆகியோரும் பிடித்துள்ளனர்.
ஒட்டுமொத்த ஆய்வில் மலையகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர வரிசை பின்வருமாறு அமைகிறது.
ம.திலகராஜா (30)வேலுகுமார் (66)
அரவிந்த குமார் (67)
வடிவேல் சுரேஷ் (90)
வி.இராதாகிருஷணன் (128)
மனோ கணேசன் (178)
பழனி திகாம்பரம் (180)
முத்து சிவலிங்கம் (181)
ஆறுமுகம் தொண்டமான் (219)
இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசைப்பட்டியலில் மலையகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக முதலாவது இடத்தை திலகர் எம்.பி பெற்றுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உத்தியோகபூர்வ ஆய்வறிக்கையான ஹன்சாட்டின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Manthri.lk இணையத்தளம் தெரிவித்துள்ளது.