அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட லிந்துலை பம்பர கல மத்திய பிரிவில் சுமார் 110 வருடம் பழைமையானதாக் கருதப்படும் தொழிலாளர் குடியிருப்புத் தொகுதி யொன்றின் சுவர்கள் சமீபகாலமாக வெடிப்புக்குள்ளாகி வருவதால் குடியிருப்பாளர்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த குடியிருப்பில் 24 குடும்பங்கள் வாந்துவருகின்ற நிலையில், தினமும் தாம் அச்சத்துடன் அங்கு வாழ்ந்துவருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நீண்ட காலமாக தாம் அங் வாழ்வதாக கூறிய குடியிருப்பாளர்கள், தற்போது இவை வெடிப்புக்குள்ளாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் சுவர்களின் வெடிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுவதால் பெரும் அச்சத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இக்குடியிருப்புக்கு அருகில் பாரிய நீர்வீழ்ச்சி காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை யெனவும் கூறும் அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தலையிட்டு இதற்கான நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்குமாறும் குறித்த தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.