காமெடி நடிகர் யோகி பாபு திருமணத்திற்கு பின், தான் ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
பொதுவாக தல அஜித்தின் ஒரு படத்தில் நடிப்பதே பலருக்கும் பெரும் கனவாக இருக்கும் நிலையில், யோகிபாபுக்கு இந்த அதிர்ஷ்டம், நான்காவது முறையாக கிடைத்துள்ளது.
ஏற்கனவே யோகிபாபு வீரம், வேதாளம், மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ‘காலா’ படத்தில், சூப்பர் ஸ்டாருக்கு முன்னாள் காதலியாக நடித்த ஹீமோ குரோஷி நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மாறி மாறி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நான்காவது முறையாக, அதுவும் திருமணம் ஆன கையேடு தல படத்தில் நடிக்கும் யோகம்… யோகிக்கு கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.