கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பட்டப்பகலில் திருடமுற்பட்ட இளைஞர் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று பகலில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீடொன்றினை உடைத்து திருட முற்பட்ட நபரை துரத்தி சென்ற அப்பகுதி இளைஞர்கள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்துள்ளனர்.
அத்துடன் குறித்த இளைஞரை கட்டிவைத்த ஊரவர்கள் அவரை பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.