கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதற்கு இன்று முதல் இராணுவ பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
ஜானாதிபதியின் உத்தரவுக்கமைய பதில் பாதுகாப்பு பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த திட்டங்களை இன்று முதல் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் காலை மற்றும் பிற்பகலில் போக்குவரத்து காவல்துறைக்கு உதவ இராணுவ பொலிசார் நிறுத்தப்படுவர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இராணுவ போக்குவரத்து அதிகாரிகள் கடமையில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.