இந்த தகவல் உண்மையோ பொய்யோ என்று சரியாக தெரியாது.
தகவல் உண்மையாக இருக்குமானால் பிள்ளையானின் அரசியல் பயணத்தில் எதிர்வருகின்ற காலங்களில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்படவே வாய்ப்பு உள்ளது.
சிறையில் இருக்கும் பிள்ளையான், தனது வாக்கு வாங்கி நிலவரங்களையும், வர இருக்கும் தேர்தல் கள நிலவரங்களையும் கணிப்பிட்டு இந்த முடிவை எடுத்ததாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த முடிவை கட்சியில் உள்ள சிலர் வரவேற்கும் அதே நேரம், முக்கியமான உறுப்பினர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
பிள்ளையானின் இந்த முடிவுக்கு உண்மை காரணம் என்னவாக இருக்கும்?
TMVP கட்சிக்கு கிழக்கில் கணிசமான வாக்கு வாங்கி இருப்பது ஓரளவுக்கு உண்மையாக கூட இருக்கலாம், ஆனால் அந்த வாக்கு வாங்கி ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெறுமளவுக்கு இன்னும் வளர வில்லை என்பதை பிள்ளையானும் அறிவார்.
உள்ளுராட்சி சபை, மாகாண சபை போன்ற தேர்தலுக்கு மட்டுமே குறைந்த பட்ஷ ஆசனங்களை மட்டுமே பெறக்கூடிய வாக்கு வாங்கியே அவை.
அத்துடன் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை ஒரு களப் பரீட்ச்சையாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் TMVP கட்சியினருக்கு கிடையவே கிடையாது, ஏனெனின் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெறும் 11568 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்ட அனுபவம் போதுமானது.
எது எப்படி இருப்பினும்..
பிள்ளையான் உண்மையாகவே இந்த முடிவை எடுத்திருப்பாயின்…
அவர் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்காமல், தமிழ் பாராளுமன்ற பிரதிநித்துவதை அதிகரிக்க வேண்டும் என்ற உண்மையான சமூக உணர்வு கொண்டவர் என்னும் பெயரை பெறுவதோடு, இன்னுமின்னும் மக்கள் மனதை வென்று, மேலும் மக்கள் அபிமானத்தை பெறுவார் என்பதில் மாற்று கருத்து இருக்காது.
அத்துடன், எதிர்வரும் காலங்களின் கொள்கைகளில் இணக்கப்பாடு ஏற்படுமாயின் பிரதான கூட்டு கட்சிகளுடன் இணைந்து கிழக்கில் செயல்பட கூட வாய்ப்புக்கள் அமையலாம்.
அப்படி இல்லாமல், ஏனைய கட்சிகளை போன்று தோற்க்கப் போவது தெரிந்தும் களமிறங்குவார்கள் என்றால், அது வைக்கோல் போர் பிராணிக்கு ஒப்பானது என்றால் மிகையாகாது என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.