ஹொரணை- இரத்தினபுரி வீதியின் இலிம்ப பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 9.40 மணியளவில் மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
32 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்