தென்அதிவேக வீதியின் ஹம்பாந்தொட்டை முதல் கொழும்பு வரையான பயணிகள் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய ஹம்பாந்தொட்டை பேருந்து சாலைக்குட்பட்ட 4 பேருந்துக்களும், தங்காலை பேருந்து சாலைக்குட்பட்ட 4 பேருந்துக்களும் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளன.
4 பேருந்துக்கள் கொழும்பிலிருந்த ஹம்பாந்தொட்டை மற்றும் தங்காலை நோக்கி சேவையில் ஈடுபடவுள்ளது.
மேலும் நான்கு பேருந்துக்கள் ஹம்பாந்தொட்டை மற்றும் தங்காலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.
இந்த 8 பேருந்து சேவைகள் அடங்கலாக 14 பேருந்து சேவைகள் அந்த பாதையூடாக இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.