இந்தியாவிற்கு வந்துள்ள டிரம்ப், தன் மனைவி மெலானியுடன் வந்துள்ளதால், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முதல் இந்திய அரசுப் பயணம் இது தான், இதனால் அவரை வரவேற்பதற்கு மத்திய அரசு மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்தது.
அதன் படியே தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த அரசு முறை பயணத்தில், டிரம்ப் தன் மனைவி மெலானியாவை அழைத்து வந்துள்ளார். இந்த பயணத்தில் அவர் மெலானியாவை அழைத்து வருவதற்கு முக்கிய காரணம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது டிரம்பை திருமணம் செய்த பின் மெலானியா டிரம்ப் விவகாரத்தில் மிக முக்கியமான பொருளாதார நிபுணராக மாறினார்.
மெலானியாவை ஒரு பக்கம் மொடல், இன்னொரு பக்கம் தனது கணவரின் தொழில்களை முன்னின்று கவனித்து வருகிறார்.
டிரம்ப் செய்த ஒப்பந்தங்களில் மெலானியா மிக முக்கிய பங்கு வகித்தார். டிரம்ப் டவர் விவகாரத்தில் அடிக்கடி நீதிமன்றத்தின் படியேறி, பல்வேறு விஷயங்களை டிரம்பிற்கு சாதகமாக முடித்துள்ளார்.
டிரம்ப் தேர்தலில் நின்ற போது மெலானியா பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் ஆன்லைன் சார்ந்த பணிகளை மெலானியா முன்னின்று கவனித்துக் கொண்டார்.
ஆன்லைன் சார்ந்து பிரச்சாரங்களை மெலானியாதான் முன்னின்று கவனித்துக் கொண்டார். அப்போதில் இருந்து இப்போது வரை இணையம் சார்ந்த பிரச்சாரம், டிரெண்ட்கள் குறித்து மீட்டிங் பலவற்றில் மெலானியா கலந்து கொண்டு இருக்கிறார்.
இப்படி டிரம்பின் ஒவ்வொரு அசைவிற்கும் பின்னால் இருக்கும் மெலானியா இந்தியா வந்தற்கு முக்கிய காரணம், வரி தொடர்பான ஒப்பந்தம். இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரிகளை குறைப்பது தொடர்பாக பேசவுள்ளார்.
டிரம்ப் இந்தியா வந்தாலும், இந்த பேச்சுவார்த்தையில் இந்திய அதிகாரிகள் உடன் பேச போவது மெலானியா தான் என்று கூறப்படுகிறது.
மிக சிறந்த பேச்சாளராக பார்க்கப்படும், மெலானியா இன்று இந்திய அதிகாரிகளின் மனதை மாற்றுவார். அமெரிக்காவிற்கு ஏற்றபடி ஒப்பந்தங்களை செய்வார் என்று கூறப்படுகிறது. இவர் தனது கணவருக்காக நிறைய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக செய்து கொடுத்துள்ளார்.
இன்று நடக்கும் பொதுகூட்டத்திலும் மெலானியா வெற்றிபெறுவார் என்று கூறுகிறார்கள். இவரை ஒரு தொழிலதிபராகவே அவர்கள் இவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து இருக்கிறார்கள்.
அதேபோல் முக்கியமான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்தும் மெலானியா பேச இருக்கிறார். கடந்த வருடம் ரஷ்யா உடன் இந்தியா செய்த ஒப்பந்தங்கள் அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. அதை பற்றி மெலானியா பேசுவார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மெலானியாவை அங்கிருக்கும் முக்கிய அதிகாரிகள் சிலர் மியூஸ் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தான் அழைப்பார்களாம், ஏனெனில் மெலானியா முக்கியமான விஷயங்களை நிறைவேற்றுதில் கில்லாடி என்பதால், வெள்ளை மாளிகையில் இப்படி ஒரு பேச்சும் உள்ளதாக கூறப்படுவதால், இந்திய வருகையில் மெலானியா நினைத்ததை சாதித்தாரா? என்பது பின்னர் தான் தெரிய முடியும்.