கொரோனா வைரஸ் பீதி காரணமாக பிரித்தானியார்கள் சிலர் வடகொரியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களை மீட்பது குறித்து பிரித்தானியா அரசாங்கம் வடகொரியாவிடம் கேட்டிருந்த நிலையில், அதை வடகொரியா நிராகரித்துள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக உலகில் இருக்கும் நாடுகள், அதற்கு முன்னெச்சரிக்கையாக இருந்து வருகின்றன.
அந்த வகையில், வடகொரியாவில் வெளிநாட்டினர் சுமார் 400 பேர், அங்கிருக்கும் அறை ஒன்றில் தனியாக 30 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நாட்டின் தலைநகர் Pyongyang-வில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனால் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய அங்கிருக்கும் வெளிநாட்டினர் மற்றும் பிரித்தானியர்களை மீட்பது குறித்து அனுமதி கோரியுள்ளது.
ஆனால் இந்த கோரிக்கை வடகொரியாவால் நிராகரிக்கப்பட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதில், நாட்டில் மருத்துவ அவசர நிலைக்கு மட்டுமே, வெளியில் விமானங்கள் பறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வரும் மார்ச் மாதத்தின் துவக்கத்தில், ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கிற்கு ஒரு சிறப்பு ஒரு வழி விமானத்தை வட கொரியா அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டினர் ஒரு மாத கலத்திற்கு பின்னர், மேலும் இரண்டு மாதங்களுக்கு தனிமைப்படுத்தபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளதால், அதையும் வடகொரியா நிராகரிக்கலாம்.
மேலும் வடகொரியாவில் இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் குடியிருப்புகள் மற்றும் அறைகளுக்குள் பூட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நாள் ஒன்றிற்கு அவர்களுக்கு ஒரு வேளை மட்டுமே உணவை பெறுகின்றனர்.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் கோரிக்கைகளை வடகொரியா நிராகரித்துள்ளதால், என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.