இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்பிற்கு உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் நினைவுபரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், முதல் நாளான இன்று அகமதாபாத்தில் உள்ள மெட்ரோ மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பின் நாட்டின் முக்கிய இடங்களுக்கு சென்ற டிரம்ப், உலக அதிசயங்களில் ஒன்றான தாஹ்மஹாலை பார்ப்பதற்காக தன் மனைவி, மகள் மற்றும் மருமனுடன் சென்றிருந்தார்.
அங்கு டிரம்ப் மற்றும் மனைவி இருவரும் நினைவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின் தாஜ்மஹாலை கண்டால் பிரம்மிப்பாக இருக்கிறது என்று இருவரும் குறிப்பிட்டிருந்தனர்.
Chief Minister @myogiadityanath presents photo of Taj Mahal to US President @realDonaldTrump as a memento.@CMOfficeUP @narendramodi @USAndIndia @IndianEmbassyUS @POTUS #TrumpIndiaVisit #NamasteyTrump #TrumpVisitIndia #IndiaWelcomesTrump #IvankaTrump pic.twitter.com/rVhwWVmPes
— DD India (@DDIndialive) February 24, 2020
இந்நிலையில் டிரம்பிற்கு நினைவுபரிசாக, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், தாஜ்மஹாலில் டிரம் மற்றும் அவரது மனைவி எடுத்து கொண்ட புகைப்படத்தை ஒரு பெரிய பிரேம் போட்டு கொடுத்தார்.
அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.