அமெரிக்கா அதிபர் டிரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அவரது குடும்பத்துடன் இந்திய வந்துள்ளார். நேற்று இந்திய பிரதமர் மோடி அவரை வரவேற்று நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.
இதற்கிடையே இன்று டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் டிரம்ப் பங்கு பெற்று வருகிறார். இந்த நிலையில், டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், டெல்லியின் மோதிபாக் பகுதியில் உள்ள அரசு சர்வோதயா மேல்நிலைப்பள்ளிக்கு சென்று குழந்தைகளை சந்தித்து பேசினார். அப்போது பள்ளிக்குழந்தைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
குழந்தைகள் பாரம்பரிய உடையணிந்திருந்து மெலனியாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை பார்த்து நெகிழ்ந்து போன மெலனியா, ” இந்தியா வருவது இதுதான் முதல்முறை. இந்திய மக்களின் அன்பும் வரவேற்பும் என்னை நெகிழ செய்து விட்டது. இந்திய மக்களின் அன்பிற்கும், உபசரிப்பிற்கும் ஈடு இணை எதுவுமில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.