எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கும் மே மாதம் 4ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத்தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டிருந்த அவர்,
“எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கும் மே மாதம் 4ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத்தேர்தலை நடத்த முடியும். தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகிறது.
ஏனைய தேர்தல்களுக்கான திகதியை நியமிப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் காணப்படுகின்ற போதிலும், பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே தங்கியுள்ளது.
சித்திரைப் புதுவருடப்பிறப்பு மற்றும் வெசாக் பூரணை தினம் ஆகியன வருவதால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் தேர்தலை நடத்தவேண்டி ஏற்படும்.
இந்தக் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை அதிகமாக காணப்படுவதால் இந்த நிலை ஏற்படும்” என்றார்.