கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று தணிய தொடங்கியுள்ளாக தகல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் இதுவரை 2,715 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 52 பேர் பலியாகினர் மற்றும் 439 பேர் கொரானா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மொத்தம் 78 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களின் எண்ணிக்கை 374 குறைந்து 8,752 ஆக உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று தணிய தொடங்கியுள்ளாக தகல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 29,745 பேர் வீடு திரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் கடந்த நாட்களை விட குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதன் முதலில் வைரஸ் பரவிய ஹுபெய் மாகாணத்திலும் நோய்த்தொற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகையே அச்சுறுத்திய கொரோனாவால் உலக பொருளாதாரமும் முக்கியமாக சீன பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. உயிர்கொல்லி வைரசான கொரோனா கட்டுக்குள் வரவேண்டும் என்பதே உலக நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் எண்ணமாகும்.