கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகள் தொடர்ந்தும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் சீனாவில் மாத்திரமன்றி ஏனைய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இலங்கை இந்த நோயில் விடுபடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.எனினும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாமல் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐரோப்பிய சந்தையில் இலங்கை தங்கியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த நோய் பரவலில் இருந்து மக்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸினால் தாக்கப்பட்ட சீன பெண் சுகமாகி நாடு திரும்பியுள்ள நிலையில் மூன்று பேர் இன்னும் கண்காணிப்பு அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.