மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற 4 பேருக்கு 195,000 ரூபாவை தண்டப் பணமாக விதித்தது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்.
களியாட்டத்திற்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (23) வாகனம் ஒன்றில் சென்று நள்ளிரவு 1 மணியளவில் மட்டக்களப்பை வந்தடைந்து தமது வங்கியில் நிறுத்தி வைத்துவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
வீதிச் சோதனையிலிருந்த போக்குவரத்து பொலிஸாரின் சோதனையில், மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற இரு வங்கி முகாமையாளர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் இவர்களை ஆஜர்படுத்திய போது வங்கி முகாமையாளர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாவும் மற்றவருக்கு 55 ஆயிரம் ரூபாவும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் மதுபோதையில் மோட்டர் சைக்கிள் செலுத்திய ஒருவருக்கு 55 ஆயிரம் ரூபாவும், அவ்வாறு வேறு ஒருவருக்கு 55 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு உத்தரவிட்டு விடுவித்தார்.