ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட நீதிவான் நீதிமன்றம் அவரை இன்று பிணையில் விடுவித்தது. அவர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து இலட்சம் ரூபா இரண்டு சரீரப்பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்புகளுடன் ரஞசன் ராமநாயக்கவின் குரல் ஒத்துபோவதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.