“நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசு அமைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருப்பது பகல் கனவாகும்.”
இவ்வாறு கூறினார் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
“பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவோம். இது உறுதி” எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கூறிய கருத்துப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைப் பிரகடனத்தை அர்ஜுன் அலோசியஸுக்குச் சொந்தமான அச்சகத்தில் அச்சிட்டுள்ளதாகவும், அதனால் அலோசியஸுக்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசு நடவடிக்கை
எடுக்கப்போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் அலோசிஸின் அச்சகத்தில் அச்சிடப்பட்டதாகத் தெரிவிப்பதில் எந்த உண்மயும் இல்லை. முடிந்தால் அதனை நிரூபித்துக் காட்டுமாறு சம்பிக்க ரணவக்கவிடம் சவால் விடுக்கின்றேன்” – என்றார்.