ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக்கட்சியும் தமது முன்னணியுடன் இணைந்து செயற்படவேணடும் என்று ஐக்கிய தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்
தாமும் முன்னணியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தமது முன்னணியுடன் இணைந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக சஜித் இதன்போது குறிப்பிட்டார்.
தமது முன்னணி எதிர்வரும் 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன்போது ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்பார் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஏற்கனவே சஜித் தலைமையிலான முன்னணியுடன் ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி என்பன இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளன.



















