யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணம், நகைகளை திருடி வந்த நபர் ஒருவர் நேற்றையதினம் வசமாக சிக்கியுள்ளார்.
மாதாந்த கிளினிக் சிகிச்சைக்காக வருவதை போல, போலி ஆவணங்களை தயாரித்து, வைத்தியசாலைக்குள் காத்திருந்து, குறித்த நபர் திருடி வந்துள்ளார்.
குறித்த நபர் யாழ்திருநகர் பகுதியில் வசிக்கும் 29 வயதான இளைஞன் எனவும் கூறப்படுகின்றது.
தானே தயாரித்த போலி கிளினிக் ஆவணங்களுடன் அதிகாலையிலேயே வைத்தியசாலைக்கு வரும் குறித்த இளைஞர் நோயாளிகளுடன் , வரிசையில் காத்திருந்து தனிமையில் வரும் முதியவர்களிற்கு உதவுவதை போலவும், ஏமாளிகளை அடையாளம் கண்டும் தனது கைவரிசையை காட்டி வந்துள்ளான்.
அவ்வாறே நேற்றையதினமும் அவர் தனது கைவரிசையை காட்ட முற்பட்டபோது கையும் மெய்யுமாக சிக்கியுள்ளார்.
இதனையடுத்து மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேகநபர் , யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.