கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாட்டின் அனைத்து பள்ளிகளையும் மூடும் படி ஜப்பானிய பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
உலகைய மிரட்டி வரும் தொற்று நோயாக கொரோனா வைரஸ் மாறி வருகிறது. இந்த நோயின் காரணமாக ஜப்பானில் 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் சீனாவின் வுஹானுக்கு சென்றுவிட்டு, ஜப்பானின் Osaka-வுக்கு திரும்பிய 40 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
இதையடுத்து தற்போது, அதாவது கடந்த புதன் கிழமை அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதால், நாட்டில் பீதி நிலவியுள்ளது.
இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, நாட்டின் பிரதமர் Shinzo Abe அனைத்து பள்ளிகளையும் ஒரு மாதத்திற்கு மூட உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் எல்லாவற்றிற்கும் மேலாக அரசாங்கம் கருதுவதாகவும், இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, இளநிலை உயர்நிலைப் பள்ளிகளையும், அடுத்த வாரம் மார்ச் 2 முதல் ஒரு மாதத்திற்கு(வசந்த கால இடைவெளி வரை) தற்காலிகமாக மூடுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
வடக்கு ஜப்பானிய தீவான ஹொக்கைடோவில் சுமார் 1,600 பள்ளிகள் ஏற்கனவே மூடப்படவிருந்தன. ஏனெனில் இதயம் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்ட 80 வயது நபர் கொரோனா வைரஸால் இறந்ததை அடுத்து, ஆளுநர் நவோமிச்சி சுசுகி வியாழக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.