புதிய அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு அமைவாக கிராமத்துக்கு வீடு எனும் தொனிப்பொருளில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் அரசக்கேணி கிராமத்திலும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் காஞ்சிபுரம் கிராமத்திலும் மற்றும் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிருஷ்ணபுரம் கிராமத்திலும் வீட்டுக்கான அடிக்கல்லினை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புளோப்பளை கிராமத்திற்கு நிறைந்த கிராமம் திட்டத்தினூடாக முன்பள்ளி மற்றும் வைத்தியசாலை காண சுற்றுமதில்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் சுபாஸ்கர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.