கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாகும்.
கற்பூரவள்ளி இலையால் இயற்கையாக தயாரிக்கப்படும் சூப் உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த சிறந்தாக கருதப்படுகின்றது.
அதுமட்டுமின்றி இது வாயு தொல்லை, வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.
தற்போது இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
- கற்பூரவல்லி இலை – 15,
- ஓமம் – 2 டீஸ்பூன்,
- சீரகம் – 2 டீஸ்பூன்,
- தனியா – 2 டீஸ்பூன்,
- மிளகு – 4 எண்ணிக்கை,
- சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
- இஞ்சி – 1 துண்டு,
- பூண்டு – 4 பல்,
- சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்),
- உப்பு – தேவைக்கு,
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
- வெற்றிலை – 4,
- நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை
கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
சூப் நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும்.