சாமியார் நித்தியானந்தாவை பிடிக்க பொலிசார் கடந்த சில மாதங்களாகவே தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும் நித்தி சிக்காமல் தண்ணி காட்டி வருகிறார்.
தற்போது, தமிழ் நாட்டுக்கே இனி வரமாட்டேன் என மிகுந்த விரக்தியான குரலில் நித்தியானந்தா பேசிய வாட்ஸ்ஆப் வீடியோ வெளியானதாக கூறப்படுகிறது.
அதாவது, மேற்கிந்தியத் தீவுவில் பதுங்கியுள்ள நித்தியானந்தா, அப்படியே அமைதியாகத் தன் மீது காலத்தையும் அங்கேயே கழித்துவிட வேண்டும் என நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவரை பிடிக்க குஜராத் வழக்குகள், அவரே எதிர்பார்க்காத அளவுக்கு வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.
மேலும், இவரைப் போலவே பர்கினா பாசோ என்கிற நாட்டில் போலி பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து தப்பி ஓடிய மங்களூரைச் சேர்ந்த தாதா ரவி பூஜாரியை, இண்டர்போல் பொலிசின் உதவியுடன் கர்நாடகப் போலீஸ் அதிரடியாக மடக்கிக் கைது செய்தனர். கொலை உள்பட 200 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பூஜாரி கர்நாடக பொலிசில் சிக்கியது நித்தியானந்தாவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் தான் தன்னோட மரணம், சொத்து பற்றியெல்லாம் அந்த வீடியோவில் விரக்தியாக நித்தியானந்தா பேசியுள்ளதாக தெரிகிறது.
அதே போல் சமீபத்தில் நித்தியானந்தா வெளியிட்ட வீடியோவில், ”கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டது. இனிமேல் எனக்கும் தமிழகத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை, இனி என் வாழ்நாள் முழுவதும் நான் தமிழில் பேசுவேனே தவிர எங்கும் தமிழகத்திற்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை” என தெரிவித்திருந்தார்.