கொரோனா எனும் கொவிட்–-19 வைரஸ் சீனாவை விட ஏனைய நாடுகளில் தினமும் அதிக எண்ணிக்கையானோருக்குத் தொற்றுகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதானோம் கெப்ரியேசுஸ், ஜீனாவாவில் நேற்று இராஜதந்திரிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சீனாவில் 411 பேருக்கு புதிதாக கொவிட் -169 தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிப்பப்பட்டுள்ளதாகவும், ஏனைய நாடுகளில் 427 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தென் கொரியா, ஈரானில் கொவிட்-19 பாதிப்புகள் திடீரென அதிகரிப்பு!
சீனாவில் நேற்றுவரை 2,663 பேர் பலி சீனாவில் கொரோனா வைரஸ் எனும் கொவிட்-–19 வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 78073 பேருக்கு இவ்வைரஸ் தொற்று ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈரானில்..
ஈரானில் கொவிட்-–19 நேற்று மேலும் 3 பேர் உயிரிழந்ததுடன் 44 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஈரானில் கொவிட்-–19 வைரஸினால் நேற்றுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இவ்வைரஸ் தொற்றுடையோர் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது.
தென் கொரியாவில்…
தென் கொரியாவில் நேற்றுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அந்நாட்டில் புதிதாக 284 பேருக்கு கொவிட்-–19 வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இவ்வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை 1261 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் 12 பேர் உயிரிழந் துள்ளனர். 374 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


















