யாழ்ப்பாணம் நாவாந்துறை annai sea food நிறுவனம் தீவகத்திலுள்ள ஒட்டுமொத்த கடல்வளங்களையும் அள்ளிச்செல்கின்றது.
இந்த நிறுவனம் தீவகத்திலுள்ள பிரதேச சபைகளுக்கு வரி செலுத்துவதில்லை. கடந்த காலங்களில் சாதாரணமாக பெருநண்டினை வாங்கி சாப்பிட்டோம்.
ஆனால் இன்று நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனை தீவகத்தில் வாங்க முடியாத நிலை. கணவாய், முதலாம் & இரண்டாம் தர நண்டுகளை கூட தீவக மக்களாலோ அல்லது தீவகத்தில் வந்து நின்று செல்கின்ற கொழும்பு வாழ், புலம்பெயர் வாழ் மக்களாலோ சில்றையாக வாங்க முடியாத நிலையே காணப்படுகின்றன.
இந்த annai sea food நிறுவனமும் டக்ளஸ் தேவானந்தவும் இணைந்து இன்று வேலணை அராலித்துறையில் 150 ஏக்கரில் ( இதில் 50 ஏக்கர் சிங்களவரின் நிறுவனமொன்றுக்கு வழங்கப்படவுள்ளது ) நன்னீர் இறால் பண்ணை எனும் பெயரில் அந்த பிராந்தியத்தினையே ( மண்கும்பான் – வேலணை அராலித்துறை பகுதி ) அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .
1994 ல் தீவக மக்கள் போட்ட பிச்சையில் அரசியலிலும் , தனிப்பட்ட வாழ்விலும் ஒரு நல்ல நிலைக்கு வந்த டக்ளஸ் தேவானந்த இன்று அதே தீவகத்தினை ஒட்டுமொத்தமாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் .