ஈரானில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அவர் குடும்பத்துக்கு தெரியாமல் மருத்துவ ஊழியர்கள் புதைக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
அதிலும் ஈரானில் இதுவரை 40 பேர் வரை கொரோனா வைரஸால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி விட்டதாக சர்வதேச ஊடகங்கள் அதிர்ச்சியளிக்கும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
A woman who died of #Coronavirus is being buried without informing her family in the middle of the night, in Saqqez, Kurdistan, Iran. This is just a sample of how the IR regime is managing this crisis! @WHO wake up, millions are at risk.#IranTruth #CoronaVirusUpdate #Covid_19 pic.twitter.com/bPndTo1ABS
— IranBehtar (@BehtarIran) March 1, 2020
இந்நிலையில் ஈரானின் Saqqez நகரில் எடுக்கப்பட்ட காணொளி வெளியாகியுள்ளது.
அதில், கொரோனாவால் பென்ணொருவர் உயிரிழந்த நிலையில் அந்த தகவலை அவர் குடும்பத்தாருக்கு கூட தெரிவிக்காமல் மருத்துவ குழுவினர் நள்ளிரவில் அவர் உடலை புதைக்கிறார்கள்.
இந்த காணொளி சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இதை பார்த்த பலரும், இந்த நெருக்கடியை ஈரான் எப்படி எதிர்கொள்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் தான், மில்லியன் கணக்கானோர் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து விரைந்து செயல்படுங்கள் என தெரிவித்துள்ளனர்.