கிளிநொச்சி- இரணைமடுப் பகுதியில் ஐஸ் போதைப் பொருள்மற்றும் ஜி.பி.எஸ்.கருவி என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இன்று மாலை 5.30 மணியளவில் சோதனை செய்தனர்.
இதன்போது ,ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய ஐம்பது கிராம் ஜஸ் போதைப் பொருளும் ஜி.பி.எஸ். கருவியும் கைப்பற்றப்பட்டதோடு சந்தேக நபரான வாகன சாரதி கைது செய்யப்பட்டார்.