பொதுத்தேர்தலில் போட்டியிட தமது ஐக்கிய தேசிய சக்தி முன்னணிக்கு யானை சின்னத்தை வாடகை அடிப்படையில் தருமாறு முன்னணியின் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்
நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை யானை சின்னத்தில் போட்டியிடுவற்கான யோசனை ஒன்றை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.
தம்மை பொறுத்தவரை கட்சி ஒன்றுக்கு ஒரு தலைவரும் முன்னணிக்கு மற்றும் ஒரு தலைவரும் இருக்கமுடியாது.
ஐக்கிய தேசிய சக்தியின் தலைவராக தம்மை நியமித்துள்ளமையின் அடிப்படையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க தமக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்