இத்தாலியில் உள்ள இலங்கை பெண் ஒருவர் உயிர்கொல்லி கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார்.
இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் முதலாவது இலங்கையர் என அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
களுத்துறை மாவட்டம் ஹொரண ஹந்தபான்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உலகை உலுக்கும் கொவிட் 19 தொற்றினால் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,115 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.