மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அயித்தியமலை பொலிஸ் பிரிவில் இளம் குடும்பப்பெண் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (2) இரவு மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டினால் பெண் மணக்கமடைந்து விட்டார். இன்று காலையில் விடயமறிந்த உறவினர்கள் அவரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
நெடியமடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவரே இவ்வாறு மிக மோசமான படுகயங்களுக்குள்ளாகி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் நிமிர்த்தம் சென்றுள்ளதால் தனது மூன்று பிள்ளைகளுடன் உறவினர்களின் பாதுகாப்புடன் வசித்துவந்தநிலையில், நேற்று திங்கட்கிழமை 02ம் திகதி இரவு குறித்த தாயும் பிள்ளைகளும் தூக்கத்தில் இருந்தவேளையில், வீட்டின்டிகூரைவழியாக ஓடுகளை கழட்டிக்கொண்டு இறங்கிய மர்ம நபர், உறக்கத்திலிருந்த பெண்னை கூரிய கத்தியினால் தலையிலும் கையிலும் வெட்டியுள்ளார். காயமுற்ற பெண் மயக்கமுற்றதும் இறந்துவிட்டார் என எண்ணி குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இன்று காலையில் நீண்டநேரமாக அவர் விழிக்காததையடுத்து, உறவினர்கள் சென்றபோது, வாள்வெட்டு நடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸாரும் மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.