மெல்பர்ன் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஏ குழுவுக்கான மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தனது கடைசி லீக் போட்டியில் பங்களாதேஷை 9 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை மகளிர் அணி, தனது சிரேஷ்ட வீராங்கனை சசிகலா சிறிவர்தனவுக்கு வெற்றிவாகையுடன் பிரியாவிடை வழங்கியது.
நடப்பு மகளிர் இருபது 20 கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றியாக நேற்றைய வெற்றி அமைந்தது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 17 வருடங்களாக இலங்கை அணிக்காக சசிலா சிறிவர்தன விளையாடியுள்ளர். சசிகலா, 118 மகளிர் சர்வதேச ஓருநாள் போட்டிகளில் 7 அரைச் சதங்களுடன் 2,029 ஓட்டங்களைப் பெற்றதுடன் பந்துவீச்சில் 124 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
அத்துடன் 81 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 1,097 ஓட்டங்களைப் பெற்றுள்ள இவர், 77 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.