கொரோனா வைரஸால் சீனாவுக்கு அடுத்து அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள ஈரானில் குவியலாக சடலங்கள் வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3000-ஐ தாண்டியது.
அதற்கடுத்து ஈரானின் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 66 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் எப்படி சீனாவில் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என குற்றஞ்சாட்டப்படுகிறதோ அதே போல ஈரானிலும் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
March 2 – Qom, central #Iran
Voice says all these bodies in this tabernacle are coronavirus victims & many have been here for days.
Qom is Iran's #CoronaOutbreak epicenter.
This is another sign of the epidemic in Iran & how the regime continues to lie about death statistics. pic.twitter.com/yThGwjMyWh
— Heshmat Alavi (@HeshmatAlavi) March 2, 2020
அதற்கேற்றார் போல அந்நாட்டின் qom நகரில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவியலாக வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஈரானில் கொரோனா பாதிப்பின் மைய பகுதியான qom-ல் இவ்வளவு சடலங்கள் பல நாட்களாக அப்படியே வைக்கப்பட்டுள்ளன.
இதுவே ஈரான், கொரோனா இறப்பு விடயத்தில் பொய் சொல்கிறது என்பதற்கு சான்று என பதிவிட்டுள்ளார்